ஐ-போன் - ஓர் பார்வை

ஐ-போன் - ஓர் பார்வை

iphone-parallelsஐ-போன், உலகின் கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த 3G என்று சொல்லப்படும் 3வது ஜெனரேசன் வசதி கொண்ட செல்லிடப்பேசி.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போன் மிகுந்த எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி இருந்தது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் எண்ணற்ற வசதிகள் கொண்ட மொபைல் ஃபோனாக இருக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அதை வாங்க மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

முதலில் அமெரிக்காவில் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் நல்ல வரவேற்பு இருந்தது.

மற்ற மொபைலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா!

இதோ உங்களுக்காக தமிழ் வணிகத்தின் தொழில்நுட்ப குழுவினரின் பார்வையில் ஐபோன் பற்றி ஓர் கட்டுரை

அதென்ன 3G. அப்படின்னா என்ன? இதோ உங்களுக்கான விடை

3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது.
சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200
KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும். இதனால் தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப என நாம் எங்கும் சென்றுகொண்டிருக்கும் போதே செய்ய இயலும்.

சரி இவ்வளவு அம்சங்களுடன் இருக்கிறதே ஏன் அனைத்து நாடுகளிலும் அதிகம் பிரபலமாகவில்லை என்றால்

3G வசதி ஏற்படுத்த அதெற்கென்று காப்புரிமைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

அதிக மின்காந்த அலைகள் ஏற்படுத்துவதால், உடல்நலக்கோளாறு ஏற்படலாம் என்ற அச்சம்

3G வசதியை பயன்படுத்துபவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

புதிய தொழில் நுட்பம் என்பதால் அனைவரையும் சென்றடைய அதிக காலம் எடுக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 3G வசதி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்த வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் கமியூனிக்கேசன் நிறுவனங்கள் முயற்சிகளில் இறங்கிஉள்ளன.

முக்கியான அம்சங்கள்


அளவு மற்றும் எடை :
நீளம் :2.4 Inch அகலம் : .48 inch
உயரம்:4.5 Inch
எடை: 133 கிராம்
திரையுன் அகலம்- 3.5 Inch
சேமிக்கும் திறன்
- 8GB மற்றும் 16GB

இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் : Wi-Fi

இதில் இருக்கும் தொழில்நுட்பங்கள்

அசிலரோமீட்டர்
- இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து சாய்வாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.

லைட் சென்சார்
- நீங்கள் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் போது ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றார் போல திரை மாறிவிடும்.

ஃப்ராக்சிமிட்டி சென்சார்


* - ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக ஆப் ஆகிவிடும், இது பவரை குறைக்க உதவும் விதமாக அமைந்துள்ளது.

ஆஹா இத்தனை அம்சங்களா என்று வியந்திருக்கும் போது அதில் எண்ணற்ற குறைகளும் தெரியாமல் இல்லை
. எந்த ஒரு சாதனமும் நிறைகள் கொண்டதாக மட்டும் இருக்காது, நிச்சியம் குறைகளும் இருக்கத்தான் செய்யும்.

இதோ ஐபோனில் இருக்கும்
நிறைகள்/குறைகளின் பட்டியல்


இதோ ஐபோனின் சில முக்கிய அம்சங்கள்

இது 3G திறன் கொண்ட மொபைல் போன்
2 மெகாபிக்சல் கொண்ட கேமரா
அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன்
மெயின் மெனுவில் யூடியூப்-க்கென்று தனி ஐகான். அதை கிளிக் செய்து வீடியோ படங்களை இணையம் மூலம் பார்க்கமுடியும்.
மிக அகலமான திரை மூலமாக வீடியோப்படங்களை தெளிவாக காணும் வசதி
மட மட வென அதிவேக இணையம்.
விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.

கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.

விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
எரிச்சலூட்டும் No booting time, No logon time அதனால்
Instant email checkup, Instant Browsing, Instant Youtube பலரும் உருவாக்கிய பல்வேறு இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)

குறைகள்


MMS வசதி கிடையாது
வாய்ஸ் டயலிங்க், அதாவது உச்சரிப்பின் மூலமாக அழைப்பை ஏற்படுத்த முடியாது
ஸ்பீட் டயலிங்க் கிடையாது. (அதாவது 1வது எண்ணுக்கு இந்த நபர், 2ம் எண்ணுக்கு இந்த நபர் என்று வைத்து எளிதாக அழைக்கும் முறை)
2MP பிக்சல் கேமரா இருக்கிறது. ஆனால் அதை வைத்து வீடியோ எடுக்க இயலாது.மேலும் ஸூம் வசதியில்லை
விளையாட்டுகள் கிடையாது.
யூஎஸ்பி போன்று எளிதாக கம்ப்யூட்டரில் இணைக்க இயலாது.
ஆப்பிள் நிறுவன் சாப்ட்வேர் அல்லாத மற்ற சாப்ட்வேர்களை ஏற்றி பயன்படுத்த இயலாது.

சில நாடுகளில் சிம்மை மாற்ற இயலாதவாறு லாக் செய்து கொடுக்கிறார்கள். இதனால மற்றொரு மொபைல் நிறுவன சிம்மை பயன்படுத்த இயலாது.

தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன.

அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப் செய்யப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

GPS
நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.

கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.

Flashநுட்ப வசதியில்லை.(Updated)

8GB கொண்ட ஐபோனில் விலை 31 ஆயிரம், 16GB கொண்ட ஐபோன் 36 ஆயிரம். ஆனால் அமெரிக்காவில் இவற்றின் விலையோ இதில் பாதியே. ஏன் இங்கு மட்டும் இவ்வளவு அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அமெரிக்காவில் ஐபோன் வெளியான் 6 வாரங்களிலேயே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலையை 100 டாலர்களுக்கும் மேல் குறைத்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் முதலில் வாங்கியவர்களுக்கே அதிக எரிச்சல். இப்போது ஆரம்பத்தில் அறிவித்த விலையில் பாதியில் தான் விற்று வருகிறது. இது போதாதென்று ஐபோன் குறித்து டி.வி.யில் செய்யப்படும் விளம்பரங்களில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் கொடுக்கப்படுகின்றன என்றும், அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா அம்சங்களும் ஐபோனில் இல்லை என்றும் சொல்லி பிரிட்டனில் டி.வி.,விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் ஐபோனில் விற்பனையில் சூடுகுறையவில்லை.

ஐபோனின் ஆரம்ப விளம்பரங்கள் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் வெளிவந்த பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வரவேற்பும், ஏமாற்றமும் கொடுத்திருக்கிறது. காத்திருந்தால் விலை நிச்சயம் குறையும்.

ஐபோன், 3G மொபைல் பற்றி அனைவருக்கும் ஒரளவு தெரிந்து கொள்ள உதவி புரிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ்

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி

microsoft_surfaceடெஸ்க்டாப், மற்றும் லேப்டாப் கணினி வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறப்பானதொரு கணினியாக, இரு புறமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான கணினியாக இன்று உலகளவில் இனம் கண்டறியப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புதான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வணிக ரீதியிலான கணினி வகைகளுள் மிகவும் சிறப்பானதொரு கணினியாக, பல வகையிலும் மேம்படுத்தப்பட்ட கணினியாக விற்பனைக்காக வர உள்ளது. இக்கணினியின் மூலம் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும். எண்ணற்ற சலுகைகளை, வசதிகளை அனுபவிக்க முடியும்.
ஏராளமான வசதிகள் இக்கணினியில் உள்ளன. நம்முடைய சாதாரணத் தொடுதல், அங்க அசைவுகள் போன்றவற்றாலேயே இக்கணினியை மிக எளிதாக இயக்க முடியும். இக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள 30 இன்ச் நீள, அகலம் கொண்ட அகண்ட திரையில், நாம் கணினி திரையில் பார்க்கிறோம் என்ற உணர்வே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகப் படங்கள் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் கண் முன்னே ஒரு நபர் அமர்ந்து நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் கண்டிப்பாக, இக்கணினியின் முன் அமர்ந்துள்ளவர்களுக்குத் தோன்றும்.

அந்த அளவுக்குப் படக்காட்சிகள் தெள்ளத் தெளிவாக உள்ளன. இதன்மூலம், கணினி முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் சலிப்பு, எரிச்சல் போன்றவை இக்கணினியின் முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படாது. பார்க்க....பார்க்க ஒரு விதப் பரவச உணர்வு ஏற்படுவது நிச்சயம் என்பதால், இக்கணினியைப் பயன்படுத்தலாம்....பயன்படுத்தலாம்....தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கலாம். அந்த அளவுக்கு இந்தக் கணினியால் எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த ஒரு சலிப்பும் தட்டாது.

சர்ஃபேஸ் கணினி- ஓர் பார்வை

தற்போது புழக்கத்தில் உள்ள இதர சாதாரணக் கணினிகளில் இருந்து சர்ஃபேஸ் கணினி முற்றிலும் மாறுபட்டது என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். மேலும், மற்ற சாதாரண கணினிகளைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும், இந்தக் கணினியைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்றும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. சர்ஃபேஸ் கணினியில் உள்ள நான்கு மிக முக்கிய அம்சங்கள் குறித்து மைக்ரோசாப்ட் பட்டியலிட்டுள்ளது. அவை:

1. நேரடித் தகவல் பரிமாற்றம்: பொதுவாகவே, ஒரு கணினியை இயக்குவதற்கு மௌஸ் அல்லது கீ போர்டு கண்டிப்பாகத் தேவை. அப்போதுதான், கணினியில் உள்ள தகவல்களை நம்மால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். ஆனால் சர்ஃபேஸ் கணினியை இயக்க மௌஸ் அல்லது கீ போர்டு எதுவுமே தேவையில்லை. நம்முடைய அங்க அசைவு அல்லது தொடுதல் மூலம் எந்த ஒரு தகவலையும் கேட்கவோ, பார்க்கவோ, அனுப்பவோ முடியும்.

2. பலமுனைத் தொடுதல்: பொதுவாகவே, டச் ஸ்கிரீன் முறைகளை எடுத்துக் கொண்டால், ஒரு நேரத்தில் ஒருவரால் மட்டுமே அதுவும் ஒரு முறை மட்டுமே அந்த ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்க முடியும். ஆனால், சர்ஃபேஸ் கணினியில் அப்படியில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவ்வளவு பேர் வேண்டுமானாலும், அதிலுள்ள டச் ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பலரும், பலவித வேலைகளைக் கொடுக்கும் போது, யாருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என கணினி குழம்பிப் போகாது. கண்டிப்பாக, அனைவரின் கட்டளையையும் பதிவு செய்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டது.

3. பலமுனை பயன்பாடு: பொதுவாகவே, ஒரு கணினியை ஒருவரால்தான் இயக்க முடியும். அதிகபட்சம், இரண்டுபேர் அதனை இயக்கலாம். ஆனால், அதற்கும் மேற்பட்ட நபர்களால் கண்டிப்பாக இயக்கவே முடியாது. ஆனால், சர்ஃபேஸ் கணினியைப் பொறுத்தவரை, எவ்வளவு பேர் வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. படத்துக்கு அங்கீகாரம்: பொதுவாகவே, கணினி திரையில் தெரியும் பிம்பங்களுக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், இதில், பெயர் சூட்டுவதற்குப் பதிலாகப் படங்களைக் கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சர்ஃபேஸ் கணினி பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கும். இதன்மூலம், டிஜிட்டல் வகை தகவல்களையும் படங்களை வைத்து எளிதில் அனுப்பிக் கொள்ளலாம்.

சர்ஃபேஸ் கணினி & வேலை செய்யும் விதம்

சர்ஃபேஸ் கணினியில் பிரத்யேகக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கணினியின் முன் அமர்ந்துள்ள நபரின் அங்க அசைவுகளைக் கணினி புரிந்து கொள்ளும். அதுபோல், அவர் என்ன தொடுகிறார்? எதற்காக தொடுகிறார்? போன்ற விஷயங்களையும் மிக விரைவாக, எளிதாகப் புரிந்து கொள்ளும்.

இந்தக் கணினியில் இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்புக் கதிரும் இருப்பதால், நாம் மேஜைக்கு அடியில் கை வைத்திருந்தாலும், அந்தக் கை அசைவின் தன்மையை சர்ஃபேஸ் கணினி எளிதில் இனம் கண்டு கொள்ளும். எனவே, அந்த கை நகர்வுக்கு ஏற்ப, திரையிலும் நகர்தல் இருக்கும். நம்மைத் தொடுவது கையா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பதையும் சர்ஃபேஸ் கணினி எளிதாக இனம் கண்டு கொள்ளும். இதற்காக விஷேச லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கை விரலுக்குப் பதிலாக, பெயின்ட் பிரஷ்ஷைக் கொண்டு கணினியை இயக்குகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்....

கணினியைத் தொடுவது கை விரலா? அல்லது பெயின்ட் பிரஷ்ஷா என்பதை சர்ஃபேஸ் கணினி நொடியில் புரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி திரையில் தன் பதிலைத் தெரிவிக்கும். இதன் அகண்ட திரைதான், இதன் சிறப்பம்சமே. இந்தத் திரையைப் பொருத்துவதற்கு மேஜைதான் தேவை என்றில்லை. சுவற்றில் கூட அப்படியே மாட்டி வைக்கலாம். கண்ணாடி பொருத்தும் இடத்தில்கூட பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்....உங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜின் கதவில் கூட பொருத்திக் கொள்ளலாம். எடை அதிகமிருக்காது. வீட்டின் எந்த மூலையிலும் இதை எளிதாகப் பொருத்தி, இயக்கலாம். கையாளலாம்.

எப்போது வணிக ரீதியாக விற்பனைக்கு வரும்?

அமெரிக்காவிலுள்ள ஏ.டி.அண்டு டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்வூட் ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், டி&மொபைல்(யூ.எஸ்.ஏ.,) ஆகிய நிறுவனங்களைத்தான் தன்னுடைய அதிகாரப்பூர்வ வியாபாரப் பங்குதாரர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் உள்ள சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கும்.

இப்போதே அமெரிக்காவில், சர்ஃபேஸ் கணினிக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளதாம். சில்லரை வணிகத்தில் விற்கத் தொடங்கினால், மற்ற நிறுவனக் கணினிகள் அனைத்தும் அப்படியே விற்காமல் நின்று போய்விடும். அந்த அளவுக்கு கணினி விற்பனை வரலாற்றில் சர்ஃபேஸ் கணினி ஒரு மிகப்பெரிய சகாப்தத்தையே ஏற்படுத்தப் போகிறது. இதன் வரவை அனைவரும் எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் சர்ஃபேஸ் கணினிகள் முழு வீச்சில் சில்லரை வணிகம் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சர்ஃபேஸ் கணினி பற்றிய சில வீடியோ தொகுப்புகளும் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தொகுப்பில், இந்தக் கணினியைப் பற்றிய முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சர்ஃபேஸ் கணினியைப் பற்றி பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத பல தகவல்கள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையதளத்தில் சர்ஃபேஸ் கணினி

கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் சர்ஃபேஸ் கணினியைப் பற்றிய விவரங்களை நீங்கள் பார்த்து, தெரிந்து, அறிந்து கொள்ளலாம்.

Press Release: http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx

Product Team Blog: http://blogs.msdn.com/surface/
Product Homepage: http://www.microsoft.com/surface/index.html
Product Demo Videos: http://www.microsoft.com/surface/videos.html

கட்டுரையாளர் பற்றி
vinothகட்டுரையாளர் திரு:வினோத்குமார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகத் தயாரிப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதும் தொழில்நுட்ப எழுத்தாளர். இத்துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உண்டு. எழுத்தாளர் மட்டுமல்லாது, பேச்சாளரும் கூட. ஏராளமான பொதுக்கூட்டங்களில், கருத்தரங்குகளில் பேசியுள்ளார்.
அவரின் இணைய தளம் www.ExtremeExperts.com என்ற இணையத்தளத்துக்கு வாருங்கள்.

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

நிறைய வலைத்தளங்களில் உள் நுழையவோ அல்லது சில கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவோ சம்பந்தமே இல்லாமல் இலவச ரிஜிஸ்ட்ரேஷன் செய்யச் சொல்வார்கள். அதற்கும் நமது முழு ஜாதகத்தையும் கேட்பார்கள். இதற்காக நமது முதன்மை மெயில் முகவரி கொடுத்தால் அதில் நிறைய எரிதங்கள் (Spams)/ விளம்பரங்கள் அனுப்பித் தொல்லை கொடுப்பார்கள். இதற்காக போலி முகவரி ஒன்றை மெயிண்டெய்ன் பண்ண வேண்டி வரும். இந்தத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிதான வழி உள்ளது.

http://bugmenot.com

தளத்தை உபயோகிக்கும் முறை

1. எந்தத் தளத்தை நீங்கள் திறக்க முயல்கிறீர்களோ, அந்த முகவரியைக் குறித்துக்
கொள்ளுங்கள். (உதாரணமாக www.nytimes.com )
2. bugmenot தளத்தை திறக்கவும்
3. அந்தத் தளத்தில் 1-ல் குறித்துக்கொண்ட முகவரியை கொடுத்து. "Get Logins" என்கிற
பட்டனை அழுத்தவும்.
4. இப்போது தங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட தளத்திற்குள் நுழைவதற்கு தேவையான User
Name மற்றும் Password கிடைக்கும்.

இந்த bugmenot இணைய தளம் ஸ்பாம் மடல்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கும், மேலும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும் வகையில் உள்ளது.

அப்புறம் இந்தத் தளத்திற்குள் நுழைய ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் கிடையாது. ;) ;)

குழும இணைய தளங்கள் (இணைய பக்கங்களை மாற்றிவிடும் உரிமை கொடுக்க ரிஜிஸ்ட்ரேஷன் கேட்பது), பணம் கட்டி பார்க்கும் இணையதளங்கள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் இந்த bugmenot இணைய தளத்துடன் தொடர்புகொண்டு தங்கள் தளத்தை இதிலிருந்து பிளாக் பண்ணிக் கொள்ளலாம்.

வீடியோக்களை இணையிறக்கம் செய்ய

யூட்யூப், மெட்டாகஃபே, கூகிள் வீடியோஸ் போன்ற தளங்களில் இருந்து வீடியோக்களை இணையிறக்கம் செய்து மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் இருக்கின்றன.

ஆனால் அவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு மனதளவில் தயக்கம் இருக்கிறவர்களுக்கான மாற்று முறையை இங்கே கொடுக்கிறேன்.

வீடியோவையும் இறக்கிக்கொள்ளவேண்டும். எந்தவிதமான மென்பொருளையும் இன்ஸ்டால் செய்யக்கூடாது.

அதற்கான வழிமுறை இதோ.
www.Keepvid.com
www.VideoDownloadX.com (formerly known as YoutubeX)
www.VDownloader.com
www.BoomVideo.com
www.ZillaTube.com
www.TubeG.com

மேற்கண்ட தளங்களில் ஏதோ ஒன்றில், மூல வீடியோவின் யு.ஆர்.எல் ஐ கொடுக்கவும். பின் எந்த வடிவில் எந்த விதமான வீடியோவாக உங்களுக்கு வேண்டும் என்று உள்ளிடவும்.

அவ்வளவுதான். உங்களது கணினியில் உங்களுக்குத் தேவையான வீடியோ கிடைத்துவிடும்.

செல்போனின்தரம்

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும்.

அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் தரம் குறைந்த பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான செல்போன்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# இது எந்த போனுக்கும் பொருந்தும்.
போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*

நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்

இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
*#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
*#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
*#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
*#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய (சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)

சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்

சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
#*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
#*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
#*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
*#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
*#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
*2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
*#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
*2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.
__________________

ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு

ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு
ஜிமெயில் ஒரு புதிய பாதுகாப்பு முறையை உள்ளது.

அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.

http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

Xoopit -Add On

பயர் ஃபாக்ஸ்
அனைவரும் அறிந்த இணைய உலாவி.

அதனுடன் இணைக்க நூற்றுக்கணக்கான Add-On கள் உண்டு.
அதில் XOOPIT பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதன் வலைப்பகத்திற்க்கு சென்று இதற்கான நீட்சியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதை பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே பயன் படுத்தமுடியும்.
பதிவு செய்வது இலவசம் தான்.


நாம் நமது ஜீ மெயிலின் கணக்கை திறந்தவுடன் கீழ் கண்டவாறு Xoopit இணைந்துகொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
இதில் நமது மெயில் பாக்ஸ்சில் உள்ள மெயில்களில் அனுப்பப்படும் படங்களை தனியாக பட்டியலிட்டு காட்டும், அதே போல் வீடியோக்களையும், இணக்கப்பட்ட கோப்புகளையும் எண்ணிக்கையுடன் காட்டும்.












கிட்டதட்ட யாகூ மை பிச்சர் போல.
நான் உபயோகித்ததில் நன்றாக உள்ளது, நீங்களும் பாருங்களேன்.