ஃபயர் ஃபாக்ஸ் உலவியின் பாதுக்காப்புக்கு
பாதுகாப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும் ஒரு நீட்சிதான் WOT.
இந்த FireFox Addon (நீட்சி)யை நிறுவிவிட்டால், உலகில் உள்ள 20 மில்லியன் தளங்களைப் பற்றிய பாதுகாப்பு விபரங்களை அது அறியத்தருகிறது. ஏதேனும் ஒரு தளத்தை நீங்கள் பார்வையிட முயற்சிக்கும்போது பச்சை / மஞ்சள் / சிவப்பு நிறங்களின் மூலம் எச்சரிக்கை செய்துவிடும்.
.கூகிள் போன்ற தேடுதல்வேட்டை முடிவுகளை அறிவிக்கும் தேடியந்திரங்களின் அறிக்கைகளிலும் நச்சுநிரல்களைப் பரப்பக்கூடிய தளங்களும் இடம்பெற்று இருக்கின்றன. தேடுதல் அறிக்கை வெளியாகும்போதே, பச்சை / மஞ்சள் / சிவப்பு நிறங்களில் தளத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களையும் WOT உடன் இலவச இணைப்பாகத் தருகிறது.
தீமை விளைவிக்கக் கூடிய தளங்களைப் பார்வையிடும் காண்போரின் கணினியில் குற்றம் விளைவிக்கும் நிரல்களை ஏவி விடுகின்றன. இந்த நிரல்கள் அமைதியாக இருப்பதுபோல பாவனை செய்யும். நமக்கும் இப்படி ஒரு நச்சுநிரல் நம் கணினியில் இருக்கிறதா என்பதே தெரிந்திருக்காது.
குழந்தைகள் பார்க்கக்கூடாத, நம்பகமில்லாத தளங்கள் போன்றவற்றை இந்த நீட்சியின் மூலம் முன்கூட்டியே அறிந்திட இயலும்.அடிக்கடி இணையப்பாதுகாவலனின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். WOT யை உடனே நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி :
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3456