ஐ-போன் - ஓர் பார்வை
iphone-parallelsஐ-போன், உலகின் கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த 3G என்று சொல்லப்படும் 3வது ஜெனரேசன் வசதி கொண்ட செல்லிடப்பேசி.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போன் மிகுந்த எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி இருந்தது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் எண்ணற்ற வசதிகள் கொண்ட மொபைல் ஃபோனாக இருக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அதை வாங்க மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
முதலில் அமெரிக்காவில் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் நல்ல வரவேற்பு இருந்தது.
மற்ற மொபைலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா!
இதோ உங்களுக்காக தமிழ் வணிகத்தின் தொழில்நுட்ப குழுவினரின் பார்வையில் ஐபோன் பற்றி ஓர் கட்டுரை
அதென்ன 3G. அப்படின்னா என்ன? இதோ உங்களுக்கான விடை 3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது.
சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200
KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.
குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும். இதனால் தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப என நாம் எங்கும் சென்றுகொண்டிருக்கும் போதே செய்ய இயலும்.
சரி இவ்வளவு அம்சங்களுடன் இருக்கிறதே ஏன் அனைத்து நாடுகளிலும் அதிகம் பிரபலமாகவில்லை என்றால்
3G வசதி ஏற்படுத்த அதெற்கென்று காப்புரிமைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
அதிக மின்காந்த அலைகள் ஏற்படுத்துவதால், உடல்நலக்கோளாறு ஏற்படலாம் என்ற அச்சம்
3G வசதியை பயன்படுத்துபவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
புதிய தொழில் நுட்பம் என்பதால் அனைவரையும் சென்றடைய அதிக காலம் எடுக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 3G வசதி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இந்த வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் கமியூனிக்கேசன் நிறுவனங்கள் முயற்சிகளில் இறங்கிஉள்ளன.
முக்கியான அம்சங்கள் அளவு மற்றும் எடை :
நீளம் :2.4 Inch அகலம் : .48 inch
உயரம்:4.5 Inch
எடை: 133 கிராம்
திரையுன் அகலம்- 3.5 Inch
சேமிக்கும் திறன்
- 8GB மற்றும் 16GB
இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் : Wi-Fi
இதில் இருக்கும் தொழில்நுட்பங்கள்அசிலரோமீட்டர்- இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து சாய்வாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.
லைட் சென்சார்- நீங்கள் வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்கும் போது ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றார் போல திரை மாறிவிடும்.
ஃப்ராக்சிமிட்டி சென்சார் * - ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக ஆப் ஆகிவிடும், இது பவரை குறைக்க உதவும் விதமாக அமைந்துள்ளது.
ஆஹா இத்தனை அம்சங்களா என்று வியந்திருக்கும் போது அதில் எண்ணற்ற குறைகளும் தெரியாமல் இல்லை
. எந்த ஒரு சாதனமும் நிறைகள் கொண்டதாக மட்டும் இருக்காது, நிச்சியம் குறைகளும் இருக்கத்தான் செய்யும்.
இதோ ஐபோனில் இருக்கும்
நிறைகள்/குறைகளின் பட்டியல்இதோ ஐபோனின் சில முக்கிய அம்சங்கள் இது 3G திறன் கொண்ட மொபைல் போன்
2 மெகாபிக்சல் கொண்ட கேமரா
அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன்
மெயின் மெனுவில் யூடியூப்-க்கென்று தனி ஐகான். அதை கிளிக் செய்து வீடியோ படங்களை இணையம் மூலம் பார்க்கமுடியும்.
மிக அகலமான திரை மூலமாக வீடியோப்படங்களை தெளிவாக காணும் வசதி
மட மட வென அதிவேக இணையம்.
விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
எரிச்சலூட்டும் No booting time, No logon time அதனால்
Instant email checkup, Instant Browsing, Instant Youtube பலரும் உருவாக்கிய பல்வேறு இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
குறைகள் MMS வசதி கிடையாது
வாய்ஸ் டயலிங்க், அதாவது உச்சரிப்பின் மூலமாக அழைப்பை ஏற்படுத்த முடியாது
ஸ்பீட் டயலிங்க் கிடையாது. (அதாவது 1வது எண்ணுக்கு இந்த நபர், 2ம் எண்ணுக்கு இந்த நபர் என்று வைத்து எளிதாக அழைக்கும் முறை)
2MP பிக்சல் கேமரா இருக்கிறது. ஆனால் அதை வைத்து வீடியோ எடுக்க இயலாது.மேலும் ஸூம் வசதியில்லை
விளையாட்டுகள் கிடையாது.
யூஎஸ்பி போன்று எளிதாக கம்ப்யூட்டரில் இணைக்க இயலாது.
ஆப்பிள் நிறுவன் சாப்ட்வேர் அல்லாத மற்ற சாப்ட்வேர்களை ஏற்றி பயன்படுத்த இயலாது.
சில நாடுகளில் சிம்மை மாற்ற இயலாதவாறு லாக் செய்து கொடுக்கிறார்கள். இதனால மற்றொரு மொபைல் நிறுவன சிம்மை பயன்படுத்த இயலாது.
தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன.
அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப் செய்யப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
GPS
நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
Flashநுட்ப வசதியில்லை.(Updated)
8GB கொண்ட ஐபோனில் விலை 31 ஆயிரம், 16GB கொண்ட ஐபோன் 36 ஆயிரம். ஆனால் அமெரிக்காவில் இவற்றின் விலையோ இதில் பாதியே. ஏன் இங்கு மட்டும் இவ்வளவு அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அமெரிக்காவில் ஐபோன் வெளியான் 6 வாரங்களிலேயே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலையை 100 டாலர்களுக்கும் மேல் குறைத்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் முதலில் வாங்கியவர்களுக்கே அதிக எரிச்சல். இப்போது ஆரம்பத்தில் அறிவித்த விலையில் பாதியில் தான் விற்று வருகிறது. இது போதாதென்று ஐபோன் குறித்து டி.வி.யில் செய்யப்படும் விளம்பரங்களில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் கொடுக்கப்படுகின்றன என்றும், அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா அம்சங்களும் ஐபோனில் இல்லை என்றும் சொல்லி பிரிட்டனில் டி.வி.,விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் ஐபோனில் விற்பனையில் சூடுகுறையவில்லை.
ஐபோனின் ஆரம்ப விளம்பரங்கள் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் வெளிவந்த பின்னர் பல பிரச்சனைகளுக்கு இடையே வரவேற்பும், ஏமாற்றமும் கொடுத்திருக்கிறது. காத்திருந்தால் விலை நிச்சயம் குறையும்.
ஐபோன், 3G மொபைல் பற்றி அனைவருக்கும் ஒரளவு தெரிந்து கொள்ள உதவி புரிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.