வசன வாசகங்களுடன் டிவிடி பார்க்க

வசன வாசகங்களுடன் டிவிடி பார்க்க

வசன வாசகங்கள் எழுத்து வடிவில் சின்னத்திரைக் காட்சியில் தெரிந்தால் மொழி புரியாத வெளிநாட்டுப் படங்களையும் ரசித்துப் பார்க்க முடியும்.

அதற்கான வசதி தான் Sub title எனப்படும் வசன வாசகங்களைக் காட்டும் முறை.

நவீன DVD Playerகளில் subtitleகளைக் காண்பிக்கும் வசதி இருப்பதால், நமக்குத் தேவையான மொழியில் Subtitle ஐத் தேர்ந்தெடுத்துப் பார்வையிடலாம்.

ஒரு DVD disk ல் ஆங்கிலப் படங்கள் பதிவாகி இருக்கிறது. அது avi அல்லது wmv போன்ற கோப்புமுறையில் இருக்கின்றது என்று கொள்வோம்.
ஆனால் அப்படத்தில் Subtitle இல்லாமல் இருக்கின்றது.

எவ்வாறு படத்தினை subtitle உடன் காண்பது?
ஒரு படத்துக்கான subtitle ஐ எவ்வாறு உருவாக்குவது?!
அதற்கான மென்பொருள் தான் Subtitle Edit ஆகும்.

srt என்னும் extension உடன் இருப்பவையே. தற்போது வெளிவரும் அனைத்துப் படங்களுக்கும் வசன வாசகங்கள் அடங்கிய கோப்புக்கள் பல மொழிகளுக்கும் இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றை download செய்து, படம் எந்தப் பெயரில் இருக்கின்றதோ அதே பெயருக்கு srt ஐயும் மாற்றி படத்தை VLC அல்லது Media Playerல் ஓட விட்டால் Subtitle உடன் படத்தைக் காணலாம்.

Sivaji.avi என்றிருந்தால் Sivaji.srt என்று அதே பெயரில் வசன வாசகக் கோப்பின் பெயரும் இருக்க வேண்டும்.

இந்த இலவச மென்பொருளை இணையிறக்கம் செய்வதற்கான சுட்டி இதோ இங்கே :

http://www.nikse.dk/se/
blog comments powered by Disqus