ஃப்யர்ஃபாக்ஸ் Add-On

லினக்ஸ் என்பதால் நான் நெருப்பு நரி, ஓபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களையே உபயோகிக்கிறேன்.

நெருப்பு நரியில் நான் உபயோகிக்கும் சில எக்ஸ்டென்ஷன்கள்

    * நெருப்பு நரி விடியோ தரவிறக்க உதவியாளர்: இது யூட்யூப் போன்ற தளங்களிலிருந்து விடியோக்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படும்.

    * நீங்கள் அலுவலகத்தில் ப்ராக்சி(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ராக்சி) உபயோகிக்க வேண்டி இருந்தால், வீட்டில் அதை உபயோக்கிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மடிக்கணினி உபயோகிப்பவராக இருந்தால்) பாக்சி ப்ராக்சி உபயோகிக்கலாம். ஒரு சொடுக்கலில் (single click) நீங்கள் உங்களுக்குத் தேவையான ப்ராக்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது ப்ராக்சியை செயல் இழக்கச் செய்யலாம்.

    * தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் ஆட்-ஆன் DownThemAll உபயோகப்படுத்தி பாருங்கள் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.

 

    * பாஸ்ட் டையல் - புக்மார்க் போன்று

 

    * இன்னும் பல உபயோகமான ஆட்-ஆன்களுக்கு இத்தளத்தை பாருங்கள். About

 

கிம்ப் - புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் மென்பொருள் (அடோபி போட்டொஷாப் போன்று)

கேரைட் - எளிய கேடிஈ தொகுப்பாளர் மென்பொருள்

கேடார்ரன்ட் - படங்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் மென்பொருள்

டிஜிகேம் - புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் கேடிஈ-யின் மென்பொருள், இதில் உள்ள சிறப்பு புகைப்படங்களை குழுக்களாக பராமரிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் அனைத்துப் புகைப்படங்களிற்கு ஓரக்கோடு/சட்டம்(border/frame) போட விரும்பினால் டிஜிகேம் சிறந்த வழி

 

அக்ரெகேட்டர் - RSSFeed படிக்க

அமரோக் - பாடல்கள் கேட்க

விஐ(ம) - சக்திவாய்ந்த தொகுப்பாளர். விசுவல்(visual) கமாண்டின் சுருக்கமே விஐ - சக்தி வாய்ந்த

பிட்ஜின் - இதன் வழியாகத்தான் யாஹூமற்றும் ஐ.ஆர்.சி சேட் செய்வேன்.

காண்டாக்ட் - கேடிஈ-யின் PIM (Personal Information Manager) மென்பொருள்.

விஎல்சி - படம் பார்க்க, இதன் மூலமாக நீங்கள் பார்க்கும் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அடாசிட்டி - ஒலிப் பதிவு செய்யும் மென்பொருள்

கே3பி - சிடி/டிவிடி பதிவு செய்ய உதவும் மென்பொருள்

யம் எக்ஸ்டெண்டர்(யமெக்ஸ்/yumex) - மென்பொருள் நிறுவ

தண்டர்பேர்ட் - ஈமெயில் அனுப்ப/படிக்க

blog comments powered by Disqus